தூத்துக்குடி
விளாத்திகுளம் அருகே ரூ.1.21 கோடியில் தார் சாலை அமைக்கும் பணி
|விளாத்திகுளம் அருகே ரூ.1.21 கோடியில் தார் சாலை அமைக்கும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள சுப்பலாபுரம், குமரட்டியாபுரம், வேலாயுதபுரம் ஆகிய கிராமங்களில் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 21 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடித்திட பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
விளாத்திகுளம் அருகே உள்ள வெள்ளையம்மாள்புரம் கிராமத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு கோவில்பட்டி பூச்சிகள் வல்லுனர் கோவிந்தகுமார் தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து கிராமத்தில் வீடு வீடாக சென்று தண்ணீர் தொட்டியில் தேங்கியுள்ள நீர், குளிர்சாதன பெட்டியில் இருந்து வரும் கழிவுநீர் உள்ளிட்டவற்றில் இருந்து கொசுக்கள் பரவும் என்பதால் அதனை உடனுக்குடன் சுத்தம் செய்து வெளியேற்ற வேண்டும் என்றும், டெங்கு வராமல் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களிடம் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார். மேலும் கிராமத்தில் உள்ள கால்வாய்கள், குப்பை தொட்டிகளை ஆய்வு செய்து, கொசுக்கள் பரவாத வண்ணம் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், சீனிவாசன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்புராஜன், சிவஞானபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தண்டாயுதபாணி, சுகாதார ஆய்வாளர்கள் ராமலிங்கம், பாலகண்ணன், கண்ணன், தினேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.