< Back
மாநில செய்திகள்
செய்யாறு அரசு ஆண்கள் பள்ளியில் ரூ.24 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடக்கம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

செய்யாறு அரசு ஆண்கள் பள்ளியில் ரூ.24 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடக்கம்

தினத்தந்தி
|
7 Sept 2023 11:01 PM IST

தினத்தந்தி செய்தி எதிெராலியாக செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ரூ.24 லட்சம் மதிப்பில் 8 அடி உயர சுற்றுச்சுவர் கட்டும் பணி நாளை தொடங்குகிறது.

செய்யாறு

தினத்தந்தி செய்தி எதிெராலியாக செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ரூ.24 லட்சம் மதிப்பில் 8 அடி உயர சுற்றுச்சுவர் கட்டும் பணி நாளை தொடங்குகிறது.

அரசு ஆண்கள் பள்ளி

செய்யாறு டவுனில் ஆற்காடு சாலையில் கடந்த 1917-ம் ஆண்டு செய்யாறு அரசு உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1978-ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்த பள்ளி நூற்றாண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலர் உயர் பதவி வகித்து பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

தற்போது இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 1,200 மாணவர்களுக்கு ஆசிரியர் மற்றும் ஆசிரியரில்லா பணியாளர்கள் என 70-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இப்பள்ளி அருகில் பஸ் நிலையம் செயல்பட்டு வருவதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.

இடிந்து விழுந்தது

கடந்த டிசம்பர் மாதம் உருவான புயல் மழையின் காரணமாக பள்ளியின் பின்புறம் உள்ள சுற்றுச்சுவர் சுமார் 130 மீட்டர் அளவில் இடிந்து விழுந்தது. மழை பாதிப்பினை கலெக்டர் பா.முருகேஷ் ஒ.ஜோதி எம்.எல்.ஏ மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்ட னர்.

அப்போது மீண்டும் 8 அடி உயர சுற்றுச்சுவர் அமைக்க கலெக்டர் பரிந்துரை செய்தார்.

ஆனால் 7 மாதங்களாகியும் சுற்றுச்சுவர் அமைக்கவில்லை. இதனால் பாதுகாப்பு அற்ற நிலையில் இருப்பதால் இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் பள்ளி விளையாட்டு மைதானத்திற்குள் நுழைகின்றனர்.

இதுகுறித்து கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி மாணவர் நலன் கருதி பள்ளியின் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று தினத்தந்தியில் செய்தி வெளியானது.

ரூ.24 லட்சத்தில் சுற்றுச்சுவர்

தினத்தந்தி செய்தி எதிரொலியாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் நிதியில் இருந்து ரூ.24 லட்சத்தில் 7 அடி கான்கிரீட் சுற்றுச்சுவர் மற்றும் அதன் மேல் இரும்பு கம்பியால் வேலியென 8 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி அளவில் கட்டுமான பணி தொடங்க பூமி பூஜை நடைபெறுகிறது.

சுற்றுச்சுவர் அமைக்க செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்