திருப்பத்தூர்
அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர், அங்கன்வாடி கட்டிடம் கட்ட நடவடிக்கை
|அதிபெரமனூர் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர், அங்கன்வாடி கட்டிடம் கட்ட நடவடிக்கை - தேவராஜி எம்.எல்.ஏ. உறுதி
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட அதிபெரமனூர் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 95 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டித் தரக் கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் அங்கன்வாடி கட்டிடம், நவீன கழிப்பிட வசதி செய்துதர கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று தனது தொகுதி நிதியில் இருந்து பள்ளிக்கு சுற்றுச் சுவர் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.
பின்னர் பள்ளி ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வின் போது வார்டு உறுப்பினர் குருசேவ், பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.