< Back
மாநில செய்திகள்
புதுமடம் கடற்கரையில் புதிய சாலை அமைக்கும் பணி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

புதுமடம் கடற்கரையில் புதிய சாலை அமைக்கும் பணி

தினத்தந்தி
|
8 Jan 2023 12:04 AM IST

புதுமடம் கடற்கரையில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பனைக்குளம்.

மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு திட்ட பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. சாலை அமைக்கும் பணி, குடிநீர் குழாய் அமைக்கும் பணி, நிழற்குடைகள் உள்ளிட்ட பணிகள் நடைபெறும் இடங்களை ஊராட்சி மன்ற தலைவர் காமில் உசேன், ஊராட்சி செயலர் நாகேந்திரன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டனர். நீண்ட காலமாக புதுமடம் கடற்கரை அருகாமையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகம் முதல் கடற்கரை வரை செல்லக்கூடிய பாதை சாலை வசதியின்றி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள், மாணவர்கள் நலன்கருதி காமராஜர் பல்கலைக்கழகம் செல்வதற்கு சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்