< Back
மாநில செய்திகள்
ஆலங்குளம் அருகே ரூ.48.70 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணி
தென்காசி
மாநில செய்திகள்

ஆலங்குளம் அருகே ரூ.48.70 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணி

தினத்தந்தி
|
23 Jun 2023 12:15 AM IST

ஆலங்குளம் அருகே ரூ.48.70 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள கருவந்தா கிராம ஊராட்சியில் கருவந்தா முதல் சோலைசேரி வரை 2.75 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.48.70 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் தானியேல் தலைமை தாங்கி, சாலை அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மங்களம், ஊராட்சி செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்