< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
புதிய சாலை அமைக்கும் பணி; துணை மேயர் தொடங்கி வைத்தார்
|25 Jun 2023 1:15 AM IST
நெல்லை டவுனில் புதிய சாலை அமைக்கும் பணியை துணை மேயர் கே.ஆர்.ராஜூ தொடங்கி வைத்தார்.
நெல்லை மாநகராட்சி நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட 27-வது வார்டு டவுன் கரியமாணிக்கபெருமாள் ரத வீதியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. மண்டல தலைவர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். கவுன்சிலர் உலகநாதன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். உதவி செயற்பொறியாளர் பைஜூ, இளநிலைபொறியாளர் விவேகானந்தன் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.