< Back
மாநில செய்திகள்
புதிதாக ரேஷன் கடை, தார் சாலை அமைக்கும் பணி
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

புதிதாக ரேஷன் கடை, தார் சாலை அமைக்கும் பணி

தினத்தந்தி
|
26 Jun 2023 11:08 PM IST

நாட்டறம்பள்ளி பகுதியில் புதிதாக ரேஷன் கடை, தார் சாலை அமைக்கும் பணியை தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம், மல்லப்பள்ளி ஊராட்சியில் முத்தனப்பள்ளி, மல்லப்பள்ளி, ஏரியூர் ஆகிய பகுதிகளில் புதிதாக ரேஷன் கடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.

ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணியை திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.அசோக்குமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், முன்னாள் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் எஸ்.ராஜா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றியம், கே.பந்தாரப்பள்ளி, நாயனசெருவு, வெள்ளநாயாக்கனேரி, பச்சூர், கொண்டகிந்தனப்பள்ளி ஆகிய பகுதிகளில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கும் பணியினை க.தேவராஜி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் வெண்மதி முனிசாமி, நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.சாமுடி, பொதுக்குழு உறுப்பினர் கே.சாம்மண்ணன், மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர் எம்.சிங்காரவேலன், மு.மாவட்ட தொண்டரணி து.அமைப்பாளர் எஸ்.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையோரம் பயணிகளுக்கு நிழற்குடை அமைப்பதற்கான இடத்தை தேவராஜி எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்