< Back
மாநில செய்திகள்
சிந்தாதிரிப்பேட்டையில் நவீன மீன் அங்காடி கட்டும் பணிஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை
மாநில செய்திகள்

சிந்தாதிரிப்பேட்டையில் நவீன மீன் அங்காடி கட்டும் பணிஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
11 July 2023 12:41 PM IST

மீன் அங்காடி கட்டிடம் கட்டும் பணியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மீன் அங்காடி கட்டிடம் கட்டும் பணியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம் வார்டு 62-க்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில், சிங்கார சென்னை 2.0 மற்றும் மூலதன நிதியின் கீழ் ரூ.2.19 கோடியில் 102 கடைகளுடன் புதிதாக நவீன மீன் அங்காடி கட்டிடம் கட்டும் பணியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நவீன மீன் அங்காடி கட்டுவதற்கான பணிகளை குறித்த காலத்தில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதையடுத்து தேனாம்பேட்டை மண்டலம், பீட்டர்ஸ் சாலையில் ரூ.2.89 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிையயும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்-மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்