< Back
மாநில செய்திகள்
ரூ.5 லட்சம் மதிப்பில் இணைப்புச் சாலை அமைக்கும் பணி
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

ரூ.5 லட்சம் மதிப்பில் இணைப்புச் சாலை அமைக்கும் பணி

தினத்தந்தி
|
22 May 2022 10:00 PM IST

ரூ.5 லட்சம் மதிப்பில் இணைப்புச் சாலை அமைக்கும் பணி பூமிபூஜையுடன் தொடங்கியது.

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ஐப்பேடு காலனி மேட்டுத்தெருவில் இருந்து வெங்குப்பட்டு சாலை வரை இணைப்பு சாலை அமைக்க அப்பகுதியை சேர்ந்த ஒன்றியக் குழு உறுப்பினர் சாவித்திரி பெருமாள், முனியன் மகன் யாகா ஆகிய இருவரும் தங்கள் சொந்த பணம் ரூ.5 லட்சம் மதிப்பில் ஏற்பாடு செய்திருந்தனர். சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் சாவித்திரி பெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார், அவைத் தலைவர் அசோகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், யாகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சோளிங்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்து ஒன்றியக் குழு உறுப்பினர் சாவித்திரி பெருமாள், யாகா ஆகியோரை பாராட்டினார். நிகழ்ச்சியில் ஐப்பேடு தி.மு.க. கிளை நிர்வாகி கே.பூபாலன், மாயகிருஷ்ணன், வெங்குப்பட்டு முன்னாள் தலைவர் சிவராமன், நகராட்சி துணைத் தலைவர் பழனி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்