< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
ரூ.3¾ கோடியில் தொழில் பட்டறை கட்டிடம் கட்டும் பணி
|4 Sept 2022 12:17 AM IST
ரூ.3¾ கோடியில் தொழில் பட்டறை கட்டிடம் கட்டும் பணிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே மொளசூரில் திண்டிவனம் அரசு தொழிற் பயிற்சிநிலையம் உள்ளது. இங்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் ரூ.3 கோடியே 73 லட்சம் செலவில் தொழில் பட்டறை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கி கட்டிட பணியை தொடங்கி வைத்தார். இதற்கு ஒன்றியக்குழு தலைவர்கள் தயாளன், சொக்கலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. சீதாபதி சொக்கலிங்கம், ஒன்றியக்குழு துணை தலைவர் பழனி, மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் சேகர், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், சீனி ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் வக்கீல் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.