செங்கல்பட்டு
பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதி கட்டும் பணி - தலைமை செயலாளர் ஆய்வு
|செங்கல்பட்டு மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரியில் சமூக நலத்துறை சார்பில் தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதி கழகம் மூலம் ரூ.6.44 கோடியில், பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது.
மேலும் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கத்தில் சமூக நலத்துறை சார்பில் தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதி கழகம் மூலம் ரூ.22.67 கோடியில், பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது.
இதன் கட்டுமான பணிகளை தலைமை செயலாளர் வெ.இறையன்பு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் நா.முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் வி.அருண்ராய், மாவட்ட கலெக்டர் ஏ.ஆர்.ராகுல்நாத், அரசு பணிபுரியும் மகளிர் விடுதி கழக தலைமை செயல் அதிகாரி மாலதி ஹெலன் உள்பட அதிகாரிகள் உள்ளனர்.