< Back
மாநில செய்திகள்
ரூ.149 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

ரூ.149 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி

தினத்தந்தி
|
15 Oct 2023 3:23 AM IST

தஞ்சை அருகே.149 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குனர் ஆய்வு செய்தாா்

தஞ்சாவூர்;

தஞ்சையை அடுத்த வல்லம் அய்யனார்கோவில் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் திட்டத்தின் கீழ் 384 குடியிருப்புகள் ரூ.31 கோடியே 60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குனர் சங்கர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் அவர், வல்லம் அய்யனார்கோவில் பகுதியில் 2-வது திட்டமாக 969 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.149 கோடியே 32 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமானதாகவும், குறித்த காலத்திற்குள்ளும் முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.ஆய்வின்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் இளம்பரிதி, உதவி செயற்பொறியாளர் யோகேஸ்வரன், உதவி பொறியாளர் கார்த்திக் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்