< Back
மாநில செய்திகள்
ரூ.88 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

ரூ.88 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி

தினத்தந்தி
|
1 Sept 2023 8:40 PM IST

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் ரூ.88 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியை துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆய்வு செய்தார்.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி 14-வது வார்டு காசிநகர் பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்த காரணத்தால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதையடுத்து கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வான துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஏற்பாட்டின்பேரில் அங்கு நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.88 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது நகர தி.மு.க. செயலாளர் அன்பு, மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் சரவணன், துணைத்தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி, பேரூராட்சி கவுன்சிலர்கள் மணி, பாக்கியராஜ், கனகாபார்த்திபன், ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், நகர இளைஞரணி அமைப்பாளர் வினோத், துணை அமைப்பாளர் விக்கி, தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் சின்னா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்