சேலம்
செல்போன் கோபுரம் அமைக்கும் பணி
|எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. கலந்து கொண்டு செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் ஜருகுமலை கிராமத்தில் செல்போன் கோபுரம் இல்லாததால் அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். குறிப்பாக தொலைத்தொடர்பு வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கல்வி தரம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. நடவடிக்கை எடுத்ததின்பேரில் ஜருகுமலை கிராமத்தில் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பூமிபூஜை நேற்று முன்தினம் ஜருகுமலையில் நடைபெற்றது. இதில்எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. கலந்து கொண்டு செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. கலந்து கொண்டு செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பனமரத்துப்பட்டி ராஜா, ஜருகுமலை ஊராட்சி தலைவர் பழனியம்மாள் மற்றும் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊர் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.