< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
ரூ.5½ லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி
|14 Oct 2023 1:41 AM IST
ரூ.5½ லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை பூமிநாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மாநகராட்சி 43-வது வார்டு இங்கிலீஷ் கிளப் தெருவில் ரூ.5½ லட்சம் மதிப்பிலான போர்வெல் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை பூமிநாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தெற்கு மண்டல தலைவர் முகேஷ் சர்மா, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், மாநில தொண்டரணி துணைசெயலாளர் பச்சமுத்து, தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் திருப்பதி, தி.மு.க. வட்ட செயலாளர் மாணிக்கம் ரமேஷ், ம.தி.மு.க. வட்ட செயலாளர் வெள்ளைச்சாமி, கோவிந்தன் மற்றும் ம.தி.மு.க., தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.