< Back
மாநில செய்திகள்
கோரையாற்றின் குறுக்கே தற்காலிக தரைப்பாலம் அமைக்கும் பணி
விழுப்புரம்
மாநில செய்திகள்

கோரையாற்றின் குறுக்கே தற்காலிக தரைப்பாலம் அமைக்கும் பணி

தினத்தந்தி
|
4 Jun 2022 1:41 AM IST

கோரையாற்றின் குறுக்கே தற்காலிக தரைப்பாலம் அமைக்கும் பணியை கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்.

திருவெண்ணெய்நல்லூர்,

விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியம் மாரங்கியூர் -ஏனாதிமங்கலம் இடையே செல்லும் கோரையாற்றின் குறுக்கே ரூ.19 லட்சம் செலவில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் தற்காலிக தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து கலெக்டர் மோகன் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் கோரையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, பாலம் சேதமடைந்து போனது. இதையடுத்து புதுப்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறையின் திட்ட வரைவுகள் மேற்கொள்ளப்பட்டு ரூ.50 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகள் மேற்கொள்வதற்கு முன்னதாக பொதுமக்கள் போக்குவரத்துக்கு ஏதுவாக ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.19 லட்சம் செலவில் தற்போது தற்காலிக தரைப்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என்றார்.

மேலும் செய்திகள்