< Back
மாநில செய்திகள்
நிட்சேபநதியின் குறுக்கே புதிய பாலம் அமைக்க நடவடிக்கை
தென்காசி
மாநில செய்திகள்

நிட்சேபநதியின் குறுக்கே புதிய பாலம் அமைக்க நடவடிக்கை

தினத்தந்தி
|
23 July 2023 12:30 AM IST

நிட்சேபநதியின் குறுக்கே புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் யூனியன் சுப்பிரமணியபுரம் கிராமத்துக்கு மேற்கு பகுதியில் ராமர் கோவில் முன்பு வழியாக செல்லும் நிட்சபே நதியின் குறுக்கே பாலம் இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த பாலம் அடித்து செல்லப்பட்டது. தொடர்ந்து அங்கு தற்காலிக தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் மழைக்காலத்தில் நிட்சேபநதியில் தண்ணீர் செல்லும்போது பாலம் மூழ்கி விடுவதால் விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு பல கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது. எனவே அங்கு புதிய உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன்.முத்தையா பாண்டியன் சுப்பிரமணியபுரம் நிட்சேபநதியில் உள்ள சேதமடைந்த பாலத்தை பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு புதிய பாலம் அமைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். விவசாய சங்க நிர்வாகிகள் மாடசாமி, சுடலைமுத்து, அன்னமணி, கோபால், போஸ்ராஜா, மகாலிங்கம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


மேலும் செய்திகள்