< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
87 வீடுகள் கட்டும் பணி தொடக்கம்
|29 Jun 2023 12:14 AM IST
87 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நேற்று 87 வீடுகள் கட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இதில் கீழ குளத்தூர் ஊராட்சியில் மட்டும் மொத்தம் 17 வீடுகள் கட்டும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலமுரளி, உதவி திட்ட அலுவலர் விஜய் சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜாகிர் உசேன் மற்றும் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களின் முன்னிலையில் வீடு கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.