< Back
மாநில செய்திகள்
மயிலாப்பூர் பகுதியில் 4 அடுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி சவாலாக இருக்கும் - மெட்ரோ நிர்வாகம் தகவல்
மாநில செய்திகள்

"மயிலாப்பூர் பகுதியில் 4 அடுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி சவாலாக இருக்கும்" - மெட்ரோ நிர்வாகம் தகவல்

தினத்தந்தி
|
28 Dec 2022 3:47 PM IST

மயிலாப்பூர் ரெயில் நிலையத்தில் 35 மீட்டர் ஆழத்திற்கு ஒன்றின் மேல் ஒன்றாக 4 அடுக்கு சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனை 2026-ம் ஆண்டுக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளனர். இதற்கான சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணியில் ஊழியர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.

10 மீட்டர் அகலம் கொண்ட சாலைப்பகுதிகளான பட்டாளம், மயிலாப்பூர், கச்சேரி சாலை, ஆழ்வார்பேட்டை ஆகிய இடங்களில் அடுக்கடுக்கான சுரங்க பாதைகள் அமைக்கப்பட உள்ளன. மயிலாப்பூர் ரெயில் நிலையத்தில் மட்டும் 35 மீட்டர் ஆழத்திற்கு ஒன்றின் மேல் ஒன்றாக 4 அடுக்கு சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே மயிலாப்பூர் ரெயில் நிலைய பகுதியில் பாறை மண்ணாக இருப்பதால், அங்கு 4 அடுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி சவால் நிறைந்ததாக இருக்கும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்