திருவண்ணாமலை
வேன் மோதி கட்டிட மேஸ்திரி பலி
|வேன் மோதி கட்டிட மேஸ்திரி பலியானார்.
வேன் மோதி கட்டிட மேஸ்திரி பலியானார்.
கீழ்பென்னாத்தூர் தாலுகா மேல் கச்சிராப்பட்டு கிராமத்தில் வசிக்கும் விஜயன் மகன் ராமச்சந்திரன் (வயது 32). சென்னையில் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து மோட்டார் சைக்கிளில் மேல்கச்சிராப்பட்டு கிராமத்திற்கு கீழ்பென்னாத்தூர் வழியாக சென்று கொண்டிருந்தார்.
காலை 6 மணியளவில் கடம்பை பகுதியில் உள்ள ஓம் சக்தி கோவில் அருகில் சென்றபோது எதிரே திண்டிவனம் நோக்கி சென்ற வேன் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற ராமச்சந்திரன் தூக்கி வீசப்பட்ட நிலையில் தலையின் பின்புறம், மார்பு, நெற்றி ஆகிய இடங்களில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து வேனை ஒட்டி வந்த கீழ்நாச்சிபட்டு பகுதியை சேர்ந்த டிரைவர் கலைமணியை கீழ்பென்னாத்தூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த ராமச்சந்திரனுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.