< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
ரெயில் மோதி கட்டிட மேஸ்திரி சாவு
|18 April 2023 2:55 PM IST
ரெயில் மோதி கட்டிட மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் அடுத்த மருதவள்ளிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 38). கட்டிட மேஸ்திரி. இவர் தினமும் திருவள்ளூரில் நடைபெறும் கட்டுமான வேலைக்காக மணவூரில் இருந்து திருவள்ளூருக்கு ரெயிலில் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல திருவள்ளூருக்கு வேலைக்கு செல்ல மணவூர் ரெயில் நிலையத்திற்கு சென்றார்.
டிக்கெட் எடுக்க தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயில் மோதியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் ரெயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரெயில் மோதி பலியான கட்டிட மேஸ்திரி ரகுபதிக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.