< Back
தமிழக செய்திகள்

சென்னை
தமிழக செய்திகள்
கடன் தொல்லையால் கட்டிட ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை

24 Jan 2023 12:34 PM IST
ஆவடி அருகே கடன் தொல்லையால் கட்டிட ஒப்பந்ததாரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடியை அடுத்த வெள்ளானூர் மூகாம்பிகை நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மகேஷ்குமார் (வயது 38). கட்டிட ஒப்பந்ததாரர். இவருடைய மனைவி முத்துக்குமாரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர், வீடு கட்டுவதற்கு வங்கியில் ரூ.10 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அந்த வீடு கடந்த ஒரு வருடமாக முழுமை பெறாமல் பாதியிலேயே நிற்பதாக தெரிகிறது.
வங்கியில் வாங்கிய கடனையும் சரியாக கட்ட முடியவில்லை. இதனால் கடன் தொல்லை அதிகமானதால் விரக்தி அடைந்த மகேஷ்குமார், வீட்டின் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.