< Back
மாநில செய்திகள்
அரசியலமைப்பு சட்ட உறுதியேற்பு நாள் கருத்தரங்கம்
விருதுநகர்
மாநில செய்திகள்

அரசியலமைப்பு சட்ட உறுதியேற்பு நாள் கருத்தரங்கம்

தினத்தந்தி
|
27 Nov 2022 12:46 AM IST

அரசியலமைப்பு சட்ட உறுதியேற்பு நாள் கருத்தரங்கம் விருதுநகரில் நடைபெற்றது.


விருதுநகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய அரசியல் அரசியலமைப்பு சட்டம் உறுதி ஏற்பு நாள் மற்றும் மதச்சார்பின்மை ஜனநாயக பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வக்கீல் வீராசாமி தலைமை தாங்கினார். கருத்தரங்கில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணசாமி வரவேற்றார். சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி கருத்தரங்கினை தொடங்கி வைத்தார். மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ராஜமோகன் தலைமையில் கருத்தரங்கில் கலந்து கொண்டோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்க இணை செயலாளர் திலகர் சிறப்புரை ஆற்றினார். இதனை தொடர்ந்து கல்வியாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் வக்கீல்கள் குப்பையாண்டி, காளிராஜன், முருகானந்தம், நகர காங்கிரஸ் செயலாளர் ஜெய பிரகாஷ், மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி, கல்வியாளர்கள் டாக்டர் மாரியப்பன், கார்த்திகேயன், மகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டோருக்கு சத்திய சோதனை புத்தகங்களை தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் நிர்வாகிகள் சிவகுருநாதன், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்