< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தொகுதி பங்கீடு : தி.மு.க. - வி.சி.க. இன்று பேச்சுவார்த்தை
|12 Feb 2024 6:50 AM IST
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை,
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.
அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. , விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மதியம் 3 மணிக்கு இந்த பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து மாலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்துகிறது.