< Back
மாநில செய்திகள்
நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் முட்டை விலை
மாநில செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் முட்டை விலை

தினத்தந்தி
|
25 Dec 2023 6:27 PM IST

நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களாக முட்டை விலை அதிகரித்து வந்தது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது. நேற்று, புதிய உச்சமாக 5 காசுகள் விலை அதிகரித்து 5 ரூபாய் 75 காசுகளாக விற்கப்பட்டது.

இந்த நிலையில், முட்டை விலை இன்று மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு, புதிய உச்சமாக 5 ரூபாய் 80 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதன் காரணமாகவும், வட மாநிலங்களில் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதன் காரணமாகவும் முட்டை விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்