< Back
மாநில செய்திகள்
சென்னை அருகே ரெயிலை கவிழ்க்க சதி?
மாநில செய்திகள்

சென்னை அருகே ரெயிலை கவிழ்க்க சதி?

தினத்தந்தி
|
21 Sept 2024 12:56 PM IST

பொன்னேரி ரெயில் நிலையம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரெயில் நிலையம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் இன்று அதிகாலை சுமார் 2 மணி நேரத்திற்கு ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார், ரெயிலை கவிழ்க்க நடைபெற்ற சதியா? அல்லது ஊழியர்களின் கவனக்குறைவா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்

முன்னதாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு வடமாநிலங்களை இணைக்கும் சென்னை - கும்மிடிப்பூண்டி ரெயில் மார்க்கத்தில் புலிக்குளம் அருகே தண்டவாள இணைப்பு கிளிப்புகள் அவிழ்க்கப்பட்டு சிதறி கிடந்தன. தண்டவாள கிளிப்புகள் கழற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த இருவேறு சம்பவங்கள் குறித்தும் 2 தனிப்படைகள் அமைத்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்