< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க பரிசீலனை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
|23 Feb 2024 12:13 AM IST
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க பரிசீலனை செய்யப்படுகிறது என்று சட்டசபையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை,
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கப்படுமா? என்று சட்டசபையில் பா.ஜனதா உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் அ.தி.மு.க., பா.ம.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கை தொடர்பாக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது பதிலுரையில் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் 'எல்லோருக்கும் தேங்காய் எண்ணெய் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தென்னை உற்பத்தியாளர்கள் மத்தியில் இருக்கின்றது. இதுகுறித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சருடன் சேர்ந்து முதல்-அமைச்சரிடம் எடுத்துக் கூற இருக்கிறோம். ஆக, தேங்காய் எண்ணெய் கொடுத்தால், அந்த விவசாயம் செய்கின்ற மக்களுக்கு ஓர் ஆறுதலாக இருக்கும். அந்தவகையில் அந்த திட்டமும் பரிசீலனையில் இருக்கிறது' என்றார்.