< Back
மாநில செய்திகள்
நெசவாளர்களுக்கு கூடுதல் இலவச மின்சாரம் வழங்குவது குறித்து பரிசீலனை - அமைச்சர் ஆர்.காந்தி தகவல்
மாநில செய்திகள்

நெசவாளர்களுக்கு கூடுதல் இலவச மின்சாரம் வழங்குவது குறித்து பரிசீலனை - அமைச்சர் ஆர்.காந்தி தகவல்

தினத்தந்தி
|
21 Sept 2022 8:41 PM IST

கைத்தறி துறையில் புதுமையான தொழில்நுட்பங்களை மேம்படுத்த 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாக அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.

சென்னை,

சென்னையில் ஜவுளி தொடர்பான வர்த்தக மாநாடு மற்றும் கண்காட்சி இன்று நடைபெற்றது. இதனை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கைத்தறி துறையில் புதுமையான தொழில்நுட்பங்களை மேம்படுத்த 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாக தெரிவித்தார். மேலும் நெசவாளர்கள், விசைத்தறியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தின் அளவை அதிகரிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்