< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: மாவட்டத்தில் 1,350 இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தகவல்
|19 Sept 2023 3:38 AM IST
விநாயகர் சிலைகள் பிரதிஷ்டையையொட்டி மாவட்டத்தில் 1,350 இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறினாா்.
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்கள், பதற்றத்துக்கு உரிய இடங்கள் என மாவட்டம் முழுவதும் 1,350 இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. வருகிற 24-ந் தேதி வரை விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலங்கள் நடக்கின்றன. எனவே அதுவரை இந்த பாதுகாப்பு தொடரும். பதற்றத்துக்கு உரிய இடங்களில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மொத்தம் 900 போலீசார் இந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறினார்.