< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல் அருகே சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

திண்டுக்கல் அருகே சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
28 March 2023 2:15 AM IST

திண்டுக்கல் அருகே என்.பெருமாள்கோவில்பட்டியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திண்டுக்கல் அருகே அடியனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட என்.பெருமாள்கோவில்பட்டியில் சக்தி விநாயகர், காளியம்மன், பகவதி அம்மன், வெங்கடேச பெருமாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு கும்பாபிஷேகமும், சக்தி விநாயகர் கோவிலில் புதிதாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

இதையொட்டி முதல் கால, 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து நேற்று முன்தினம் காலை 4-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து கோவில் கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது கருடன் வானில் வட்டமிட்டது. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்