< Back
மாநில செய்திகள்
கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
நாமக்கல்
மாநில செய்திகள்

கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
30 Jan 2023 12:38 AM IST

பரமத்திவேலூரில் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தெற்கு நல்லியாம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள கற்பக விநாயகர் மற்றும் அருள் முருகன் கோவில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 25-ந் தேதி காலை கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், மகா தீபாராதனையும், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும், மாலை தீப வழிபாடு, யாக சாலை பிரவேசம் ஆகியவை நடைபெற்றது. 26-ந் தேதி கோபுர கண் திறப்பு, கலசம் வைத்தல், அஷ்டபந்தனம் மருந்து சாத்துதல் ஆகியவை நடைபெற்றது. பின்னர் 27-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் கலசங்கள் புறப்பாடும், கற்பக விநாயகர், அருள் முருகன், பால விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகம் மற்றும் சனீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தெற்கு நல்லியாம்பாளையம் கற்பக விநாயகர் கோவில் நிர்வாகக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்