< Back
மாநில செய்திகள்
மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
நாமக்கல்
மாநில செய்திகள்

மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
10 Sept 2022 12:53 AM IST

பரமத்திவேலூர் அருகே மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் அருகே உள்ள சூரியாம்பாளையத்தில் மகா கணபதி, பாலமுருகன், பகவதிஅம்மன், நல்லம்மா தேவியார் மற்றும் மகாமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக பக்தர்கள் காவிரி ஆற்றில் சென்று புனித நீர் எடுத்து வருதல் மற்றும் முதற்கால யாக பூஜையும், இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக மகா தீபாராதனை மற்றும் இரண்டாம் கால யாக பூஜையும், கோபுரகலசம் வைத்தலும் நடைபெற்றது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் மகா கணபதி, பகவதி அம்மன், நல்லம்மா தேவியார், பாலமுருகன் மற்றும் மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சூரியம்பாளையம் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்