< Back
மாநில செய்திகள்
அதியமான்கோட்டையில்சென்றாய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி
மாநில செய்திகள்

அதியமான்கோட்டையில்சென்றாய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
5 Sept 2023 1:00 AM IST

தர்மபுரி:

தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டையில் 1000 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் கும்பாபிஷேக விழா கொடியேற்றம் மற்றும் கணபதி பூஜை, வாஸ்து பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து வேள்வி பூஜைகளும், யாகசாலை பூஜைகளும், சாமிக்கு அஷ்டபந்தனம் சான்றுதலும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க புனித நீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் கோபுர கலசம், கருடாழ்வார் விமான கோபுர கலசம் மற்றும் கொடி மரம் ஆகியவற்றுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு வழிபாடுகள், அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் கலெக்டர் சாந்தி, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்