< Back
மாநில செய்திகள்
சிவாஜி கணேசன் உருவப்படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

சிவாஜி கணேசன் உருவப்படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை

தினத்தந்தி
|
2 Oct 2023 2:28 AM IST

நெல்லையில் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் சிவாஜி கணேசன் ரசிகர்களால் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரிக்கப்பட்டு இருந்த அவருடைய உருவப்படத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், துணைத்தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா நெல்லை மாவட்ட சிவாஜி கணேசன் மன்றத்தில் நடந்தது. விழாவில் மாவட்ட துணைத் தலைவர் லட்சுமணன், மாவட்ட பொருளாளர் இசக்கிமுத்து, பீர் முகம்மது, பார்வர்டு பிளாக் தலைவர் கணபதி முக்தார், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் மணி பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிவாஜிகணேசன் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் செய்திகள்