மயிலாடுதுறை
2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்
|2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: இலக்கிய அணி மாநில தலைவர் பேட்டி
மயிலாடுதுறையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற காங்கிரஸ் இலக்கிய அணி மாநில தலைவர் புத்தன், நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த 10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் கியாஸ் சிலிண்டர் விலை உள்பட விலைவாசி உயர்வாலும், வேலை இல்லா திண்டாட்டத்தாலும் மக்கள் மிகுந்த சிரமத்தில் இருந்து வருகின்றனர். ரூ.480-க்கு விற்ற கியாஸ் சிலிண்டர் சமீபத்தில் ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதில் ரூ.200 குறைத்து மக்களை பா.ஜ.க. அரசு ஏமாற்ற பார்க்கிறது. மக்கள் அதனை கண்டு ஏமாற மாட்டார்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தமிழகத்தில் ராகுல்காந்தி தொடங்கிய நடைபயணம் மக்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. நாளை (வியாழக்கிழமை) ராகுல்காந்தி நடைபயணம் தொடங்கி ஓராண்டு ஆவதை நினைவுபடுத்தும் வகையில் மாவட்ட தலைநகரங்களில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபயணம் மேற்கொள்ள கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதில் இலக்கிய அணியினர் திரளாக கலந்துகொள்வோம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்றார். உடன் இலக்கிய அணி மாநில பொதுச்செயலாளர் கவிஞர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் இருந்தனர்.