திருநெல்வேலி
ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரைக்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பு
|நெல்லைக்கு வந்த ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை குழுவிற்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நெல்லைக்கு வந்த ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை குழுவிற்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரை
இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியின் நினைவு தினம் வருகிற 21-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு ராஜீவ் காந்தி யாத்திரை கமிட்டி சார்பில் ஜோதி யாத்திரை புறப்பட்டது. இந்த யாத்திரை 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நிறைவடைகிறது.
முன்னதாக கன்னியாகுமரியில் இந்த யாத்திரையை சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரவியம் தொடங்கி வைத்தார். இந்த யாத்திரை நேற்று மாலையில் நெல்லைக்கு வந்தது. இதனை முன்னிட்டு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட எல்லையான கே.டி.சி. நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாலை அணிவிப்பு
தொடர்ந்து அங்கு இருந்து யாத்திரை வண்ணார்பேட்டைக்கு வந்தது. அங்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் செல்லப்பாண்டியன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு கொக்கிரகுளத்தில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு காமராஜர் மற்றும் இந்திரா காந்தி சிலைக்கு சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரவியம், மாநில பொருளாளர் ரூபி மனோகரன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் காமராஜ், மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஜோதி யாத்திரை ஆலங்குளத்துக்கு புறப்பட்டுச் சென்றது.