< Back
மாநில செய்திகள்
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி நம்பிக்கையின் கலங்கரை விளக்கம் - கனிமொழி எம்.பி. கருத்து
மாநில செய்திகள்

'கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்' - கனிமொழி எம்.பி. கருத்து

தினத்தந்தி
|
13 May 2023 9:45 PM IST

காங்கிரஸ் கட்சியின் வெற்றி நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந்தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில், இதுவரை வெளியான முடிவுகளின்படி, காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுகிறது.

இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு கனிமொழி எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், "கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றியானது மதச்சார்பற்ற சக்திகளை நம்புபவர்களுக்கு, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்