< Back
மாநில செய்திகள்
வங்கி கணக்கை முடக்கியதைக் கண்டித்து சென்னையில் இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

வங்கி கணக்கை முடக்கியதைக் கண்டித்து சென்னையில் இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
19 Feb 2024 4:11 AM IST

சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று மாலை 3 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வங்கி கணக்கை வருமான வரித்துறை மூலம் முடக்கி பழிவாங்கும் செயலில் ஈடுபட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் முன்னிலையில் சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று (19.02.2024) திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் எம்.எஸ். திரவியம், சிவ. ராஜசேகரன், ரஞ்சன்குமார், ஜெ. டில்லிபாபு, முத்தழகன், அடையாறு த. துரை ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து நடத்துவார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்