< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
|22 Aug 2023 1:43 AM IST
திங்கள்சந்தையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
அழகியமண்டபம்
சி.ஏ.ஜி. வெளியிட்டுள்ள பா.ஜ.க. அரசின் ஊழலை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்சந்தையில் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெமினிஷ் தலைமை தாங்கினார். குருந்தன்கோடு வட்டார பொதுச்செயலாளர் அஸ்வின் ராஜா, துணை தலைவர் தேவதாசன், செயலாளர் ரதீஸ், திங்கள்சந்தை பேரூராட்சி காங்கிரஸ் துணை தலைவர் ஜெலஸ்டின் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மத்திய அரசை கண்டித்து வட்டார செயல் தலைவர் வேணுகோபால் போற்றி, விவசாய காங்கிரஸ் வட்டார தலைவர் ஜெகதீஸ்பிரபு, செயல் தலைவர் ஜார்ஜ், கிருஷ்ணமூர்த்தி, அஜய் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.