< Back
மாநில செய்திகள்
அக்னிபத் திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

'அக்னிபத்' திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
28 Jun 2022 12:31 AM IST

சோளிங்கரில் ‘அக்னிபத்’ திட்டத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையம் பகுதியில் காமராஜர் சிலை அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் கோபால் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் கார்த்தி, காவேரிப்பாக்கம் ஒன்றிய தலைவர் உதயகுமார், வழக்கறிஞர் ரகுராம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் கலந்துகொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில் 'அக்னிபத்' திட்டத்தை எதிர்த்தும், அதை திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் நகராட்சி வார்டு உறுப்பினர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், மாவட்ட பொறுப்பாளர் கல்பனா, சோளிங்கர் நகரம் மற்றும் பேரூராட்சி காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்