ராமநாதபுரம்
மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் போராட்டம்
|மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடி கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் கோபால், முன்னாள் மாவட்ட தலைவர் செல்லதுரை அப்துல்லா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. சுப்பிரமணியன், காருகுடி சேகர், சேதுபாண்டியன் உள்ளிட்ட வட்டார தலைவர்கள், நகர தலைவர் கோபி, நகர்மன்ற உறுப்பினர் மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் திருமுருகன், மாவட்ட நிர்வாகிகள் துல்கிப்கான், ஆர்ட் கணேசன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் வாணி செய்யது இப்ராஹிம் புதிய நிர்வாகிகளுக்கு நியமன கடிதம் வழங்கினார்.
கூட்டத்தில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில பா.ஜ.க. அரசுகளை கண்டித்தும், மணிப்பூர் கலவரத்தை பற்றி நாடாளுமன்றத்தில் பேச மறுக்கும் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்தும், கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் மெழுகுவர்த்தி ஏந்தியும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நகர தலைவர் கோபி நன்றி கூறினார்.