< Back
மாநில செய்திகள்
கூடலூர், பந்தலூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
நீலகிரி
மாநில செய்திகள்

கூடலூர், பந்தலூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
25 March 2023 6:45 PM GMT

கூடலூர், பந்தலூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கூடலூர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இதற்கு காங்கிரசார் கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடலூர் பஸ் நிலையத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு வந்தடைந்தனர். தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாலுகா தலைவர் அம்சா தலைமையில் நகராட்சி துணைத்தலைவர் சிவராஜ் உள்பட ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.

இதேபோல் பந்தலூரிலும் காங்கிரஸ் நிர்வாகி அனஸ் எடாலத் தலைமையில் நிர்வாகிகள் சளிவயல் ஷாஜி, நகராட்சி கவுன்சிலர் உஸ்மான் உள்பட ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்