திண்டுக்கல்
காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
|திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சார்பில், மணிக்கூண்டு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.சி., எஸ்.டி.பிரிவு மாநகர மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காததை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முகமது சித்திக் மச்சக்காளை, மாவட்ட நிர்வாகிகள் அப்துல் ரகுமான், செல்வக்குமார், அபுதாகிர், தேவேந்திரன், மகிளா காங்கிரஸ் தலைவர் ரோஜா பேகம், திண்டுக்கல் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், கவுன்சிலர் பாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் மாதிரி நாடாளுமன்ற கட்டிடம் போன்று பதாகை வைக்கப்பட்டது. மாதிரி ஜனாதிபதி வேடமிட்ட காங்கிரஸ் பெண் நிர்வாகி ஒருவர், மாதிரி நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார்.