< Back
மாநில செய்திகள்
காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
தென்காசி
மாநில செய்திகள்

காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
10 April 2023 12:15 AM IST

தென்காசியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ராகுல்காந்தி பதவி பறிப்பை கண்டித்து தென்காசி மாவட்ட காங்கிரஸ் சார்பில், தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன், பொதுக்குழு உறுப்பினர் சட்டநாதன், தென்காசி நகர தலைவர் மாடசாமி, மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதய கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்