< Back
மாநில செய்திகள்
தேனியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
தேனி
மாநில செய்திகள்

தேனியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
30 March 2023 2:15 AM IST

தேனியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் பட்டியல் பிரிவு மற்றும் சிறுபான்மை பிரிவு சார்பில் தேனி பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்தும், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு பட்டியல் பிரிவு மாவட்ட தலைவர் இனியவன் தலைமை தாங்கினார். சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ராஜாமுகமது முன்னிலை வகித்தார். காங்கிரஸ் நகர தலைவர் கோபிநாத் வரவேற்றார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

இதில், மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, ஒன்றிய கவுன்சிலர் சின்னப்பாண்டி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். முடிவில் பட்டியல் பிரிவு மாநில துணைத்தலைவர் முத்துராமன் நன்றி கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்