< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
மங்கலம்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|25 Jun 2022 10:30 PM IST
மங்கலம்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம்,
மத்திய அரசை கண்டித்து, விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு நகர தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெய்சங்கர், வட்டார தலைவர் ராவணன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சுப மணிகண்டன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டமானது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் தங்கதுரை, வட்டார தலைவர் சாந்தகுமார், மகிளா காங்கிரஸ் விருத்தாசலம் நகர தலைவர் மங்கையர்க்கரசி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.