< Back
மாநில செய்திகள்
பெரியகுளத்தில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தேனி
மாநில செய்திகள்

பெரியகுளத்தில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
27 July 2023 2:30 AM IST

பெரியகுளத்தில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பில் பெரியகுளம் வடகரை உழவர் சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், அதை தடுக்க தவறியதாக மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பெண்கள் குழுவின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ராதேவி தலைமை தாங்கினார். இதில், மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காமேஸ்வரி, சர்வோதீப் அமைப்பின் இயக்குனர் சகாய சங்கீதா, பெரியகுளம் நகர் நலச்சங்க செயலாளர் அன்புக்கரசன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு, மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
மேலும் செய்திகள்