சென்னை
இந்திரா காந்தி நினைவு தினத்தையொட்டி சென்னையில் மாணவர் காங்கிரசார் ரத்த தான முகாம்
|இந்திரா காந்தி நினைவு தினத்தையொட்டி சென்னையில் மாணவர் காங்கிரசார் ரத்த தான முகாமை திருநாவுக்கரசர் எம்.பி. தொடங்கி வைத்தார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 38-வது ஆண்டு நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் எம்.சின்னதம்பி தலைமையில், மாணவர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆர்.ஆர்.முத்துக்குமார் முன்னிலையில் ரத்த தான முகாம் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி. ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணி, எஸ்.டி.ராமச்சந்திரன், மாநில பொதுச்செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, எஸ்.ஏ.வாசு, மாநில செயலாளர் சேத்துப்பட்டு ராஜா, கலைப்பிரிவு மாநில செயலாளர் சூளை ராஜேந்திரன், மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் ஆர்.யஷ்வந்த் சாகர், மாணவர் அணி மாநில செயலாளர் சுபாஷ் பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.