< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதி- மக்கள் ஆய்வு கருத்துக் கணிப்பு வெளியீடு
|24 Feb 2023 7:48 PM IST
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து மக்கள் ஆய்வு என்ற அமைப்பு கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து மக்கள் ஆய்வு என்ற அமைப்பு கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பேராசிரியர் ச.ராஜநாயகம் இந்த கருத்துக்கணிப்பை வெளியிட்டார். இதன்படி, ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் கட்சி 39.5 சதவீத வாக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது.
அ.தி.மு.க. 24.5 சதவீத வாக்குகளுடன் 2-ம் இடத்திலும், நாம் தமிழர் கட்சி 9.5 சதவீத வாக்குகளுடன் 3-ம் இடத்திலும், தே.மு.தி.க. 2 சதவீத வாக்குகளுடன் 4-ம் இடத்திலும் உள்ளது. இதில், தற்போது மவுனம் காத்து வரும் 21 சதவீத வாக்காளர்களின் வாக்குகளையும் சேர்த்த கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சி 65 சதவீத வாக்குகளும், அ.தி.மு.க. 41 சதவீதமும், நாம் தமிழர் கட்சி 17 சதவீதமும், தே.மு.தி.க. 4 சதவீத வாக்குகளையும் பெறும்" என்று தெரிவித்தார்.