மதுரை
காங்கிரஸ் கட்சியினர் நடை பயணம்
|மேலூரில் காங்கிரஸ் கட்சியினர் நடை பயணம் சென்றனர்.
மேலூர்,
75-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி மேலூரில் மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமையில் காங்கிரசார் நடை பயணம் மேற்கொண்டனர். மேலூர் அரசு கல்லூரியில் இருந்து போலீஸ் பலத்த பாதுகாப்போடு நடை பயணத்தை ெதாடங்கினர். அங்கிருந்து மேலூர் செக்கடிபஜாரில் உள்ள கக்கன் சிலைக்கு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நடைபயணத்தில் மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன், பொருளாளர் நூர்முகமது, பொதுக்குழு உறுப்பினர் திலகராஜ், எஸ்.சி.எஸ்.டி.பிரிவு மாநிலத் துணைத் தலைவர் மூர்த்தி, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்லப்பா, சரவணன், ஜெயமணி, ஓ.பி.சி. பிரிவு முருகன், மேலூர் நகர்தலைவர் மகாதேவன், முருகானந்தம், வட்டாரத்தலைவர்கள் பொன்கார்த்தி, வைரவன், ஆர்.எஸ்.பி.அசோகன், வக்கீல் துரைப்பாண்டி, கொட்டகுடி சேது மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.